• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கம்பஹா மாவட்டத்தின் உத்தேச ஒருங்கிணைத்த திண்மக்கழிவு முகாமைக் கருத்திட்டத்தின் கீழ் சேதன பசளை துறைக்கான நிலமுற்றத்தை நிருமாணித்தல்
- அதிகரித்த சனத்தொகை மற்றும் துரித கைத்தொழில்மயமாக்கம் காரணமாக நகர திண்மக்கழிவு பெருமளவில் சேகரிக்கப்படும் கம்பஹா மாவட்டத்தில் சுகாதாரமான குப்பைத்தொட்டி யொன்றை நிருமாணித்தல் உள்ளடங்கலாக திண்மக்கழிவு முகாமைத்துவக் கருத்திட்டெமான்றை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. சிதைவடையும் கழிவுகளைப் பயன்படுத்தி இக்கருத்திட்டத்தின் கீழ், கம்பஹா மாவட்டத்தில் உள்ளூராட்சி அதிகார சபைகளால் சேகரிக்கப்படும் திண்மக்கழிவை முறைமையாக வகைப்படுத்தி, சேதனப்பசளையை உற்பத்தி செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆதலால், அதன் ஆரம்ப படிமுறையொன்றாக, உற்பத்தி நோக்கத்திற்குத் தேவைப்படும் சேதனப்பசளை உற்பத்தி நிலமுற்றத்தை துரிதமாக நிருமாணிக்கும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.