• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2018 ஆம் ஆண்டை உணவு உற்பத்தி வருடமாக பிரகடனப்படுத்தல்
- உணவு பாதுகாப்பு மற்றும் நிலையான விவசாயம் என்பதனை நோக்காகக் கொண்டு 'உணவு உற்பத்திக்கான தேசிய நிகழ்ச்சித்திட்டம் 2016-2018' ஆரம்பிக்கப்பட்டதோடு, இலங்கைக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வருடாந்தம் 200 பில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட அந்நியசெலாவணியை செலவு செய்வதற்கு நேரிட்டுள்ளமையினால் உள்நாட்டில் உற்பத்தி செய்யக்க கூடிய அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சகலவற்றையும் உற்பத்தி செய்வதற்கு இங்கு கவனம் செலுத்தப்பட்டது. ஆயினும் கடந்த பயிர்ச்செய்கை போகங்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் உணவு உற்பத்தி செயற்பாடானது கடும் பின்னடைவுக்கு ஆளாகியுள்ளதோடு, இந்த நிலைமையை தவிர்த்துக் கொண்டு உணவு உற்பத்தி பணிகளை புத்துயிருடன் மேற்கொள்ளும் நோக்கில் 'உணவு உற்பத்தி வாரம் ஆரம்பிக்கப்பட்டது.

கமத்தொழில் முகம்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு மாற்று வழிகளை உருவாக்கி அதற்கான கொள்கை மற்றும் தொழினுட்ப வழ்காட்டல்களை வழங்கி கமத்தொழிலுக்கு உரியதாக எம்மிடமிருந்து விடுபடும் அபிமானத்தை மீண்டும் அடைந்து, விவசாயிகள் முகம் கொடுத்துள்ள கஸ்டமான நிலைமைகளில் இருந்து அவர்களை விடுவித்துக் கொண்டு நாட்டின் அபிவிருத்திக்கு முன்னோடிகளாக நிலையான கமத்தொழில் அபிவிருத்தியினை அடைவதற்கு கூட்டு அணுகு முறையின் கீழ் மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இற்கமைவாக அரசாங்க துறை, தனியார் துறை மற்றும் அரசார்பற்ற அமைப்புகள் ஆகியவற்றை இணைத்துக் கொண்டு உணவு உற்பத்தி செயற்பாட்டினை கையாள்வதற்கும் இதற்கு ஏற்புடைத்தானவாறு கொள்கை மற்றும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கி 2018 ஆம் ஆண்டை 'உணவு உற்பத்தி ஆண்டு' ஆக பிரகடனப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.