• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை துறைமுக அதிகாரசபையின் முனைவிட முகாமைத்துவ முறைமையினை (Terminal Management Software System) விருத்தி செய்தல்
- தெற்காசிய வலயத்தின் பிரதான கொள்கலன் நிலையமொன்றாக கொழும்பு துறைமுகம் இயங்குகின்றதோடு, வலயத்தின் ஏனைய நாடுகள் தங்களுடைய துறைமுகங்களை பிரதான துறைமுகங்களாக மாற்றுவதனை இலக்காகக் கொண்டு அவற்றின் வசதிகளையும் செயற்பாடுகளையும் அபிவிருத்தி செய்தல் நவீனமயப்படுத்துதல் போன்றவற்றை மேற்கொண்டு வருகின்றன. இந்த பின்னணியில் கொழும்பு துறைமுகம் கடும் போட்டிகரமான நிலைமைக்கு முகம் கொடுத்து வருகின்றதோடு, கொழும்பு துறைமுகத்தில் இலங்கை துறைமுக அதிகாரசபையினால் கையாளப்படும் ஜய கொள்கலன் முனைவிடம் (JCT) மற்றும் சமகி கொள்கலன் முனைவிடம் (UCT) ஆகிய முனைவிடங்களில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் முனைவிட முகாமைத்துவ மென்பொருள் முறைமையை (Terminal Management Software System) துரிதமாக இற்றைப்படுத்த வேண்டியுள்ளது. இதற்கமைவாக, இலங்கை துறைமுக அதிகாரசபையினால் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் முனைவிட முகாமைத்துவ மென்பொருள் முறைமையை இலங்கை துறைமுக அதிகாரசபையின் நிதியினைப் பயன்படுத்தி விருத்தி செய்வதற்கும் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு தொழினுட்ப மதிப்பீட்டுக் குழுவொன்றையும் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்படும் கொள்வனவுக் குழுவொன்றையும் நியமிப்பதற்குமாக துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.