• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தாங்கி தொகுதியில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள கப்பல் எண்ணை (MGO) மற்றும் CST எரிபொருள் இருப்பினை அப்புறப்படுத்துதல்
- அம்பாந்தோட்டை துறைமுக அனுசரணை உடன்படிக்கையிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் உரிய வெற்று எண்ணைத் தாங்கிகளை துரிதமாக வழங்க வேண்டியுள்ளமையினால் அம்பாந்தோட்டை துறைமுக தாங்கி தொகுதியிலுள்ள 13,500 மெட்றிக் தொன் கப்பல் எண்ணை (MGO) மற்றும் 628 மெட்றிக் தொன் IFO - 380 கொண்ட CST எரிபொருள் இருப்பினை கேள்வி கோரி அப்புறப்படுத்துவதற்கு அமைச்சரவை யினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கமைவாக மேற்கொள்ளப்பட்டுள்ள போட்டி கேள்வி விலைக் கோரலுக்கு அமைவாக தொழினுட்ப மதிப்பீட்டுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு இந்த எரிபொருள் இருப்பினை M/s Interocean Energy (Pvt) Ltd கம்பனிக்கு 3,220,800 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட தொகைக்கு வழங்கும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.