• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறிய குளங்களை சுத்திகரித்தல்
- 2015/2016 ஆண்டுகளில் செய்யப்பட்ட கணக்கெடுப்பிற்கு அமைவாக சுத்திகரிக்கப்பட வேண்டிய நிலையில் 10,497 சிறிய நீர்ப்பாசனங்கள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்த சுத்திகரிப்பு பணிகளை துரிதமாக ஆரம்பிப்பதற்கு கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் தொழினுட்ப பதவியணியில் நிலவும் பற்றாக்குறை பிரச்சினையாக அமைந்துள்ளது. இதற்கு மாற்று வழியொன்றாக துரிதமாக சுத்திகரிப்பு செய்யப்பட வேண்டுமென இனங்காணப்பட்டுள்ள 50 மில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட செலவினை ஏற்று செய்யப்பட வேண்டிய சுத்திகரிப்புக்குத் தேவையான பொறியியல் மதிப்பீடுகளைத் தயாரித்தல், வேலைத்தள மேற்பார்வை போன்ற தொழினுட்ப சேவைகள், தேசிய கொள்வனவு வழிகாட்டலை பின்பற்றி உரிய ஆற்றல், தகைமை மற்றும் அனுபவம் கொண்ட வௌிவாரி நிறுவனங்களுக்கு கையளிக்கும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.