• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
50 டீசல் மின்பிறப்பாக்கி இயந்திரங்களையும் 25 மின் மாற்றிகளையும் 25 டீசல் எரிபொருள் தாங்கிகளையும் கொண்டுவந்து பொருத்துவதற்கான கேள்வி
- இலங்கை மின்சார சபையினால் மின் உற்பத்தி செய்யும் போது சில சந்தர்ப்பங்களில் எழும் குறைபாடு காரணமாக முழுமொத்த முறைமையின் மின்சாரம் தடைப்படுவதற்கு உட்படுகின்ற மையினால் சிறிய குறைபாடுகள் நிகழும் சந்தர்ப்பங்களை தவிர்த்து கொள்வதற்காக கொள்கலன்களில் அடைக்கப்பட்ட 50 டீசல் மின்பிறப்பாக்கி இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கு மின்சார சபையினால் தீர்மானிக்கப் பட்டுள்ளது. அதே போன்று இதற்குத் தேவையான கொள்கலன்களில் அடைக்கப்பட்ட 25 மின் மாற்றிகளையும் 25 டீசல் எரிபொருள் தாங்கிகளையும் கொள்வனவு செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு மேற்போந்த கேள்வியை M/s. Sterling and Wilson Private Ltd., India நிறுவனத்திற்கு கையளிப்பதற்கு இலங்கை மின்சார சபைக்கு அதிகாரத்தினை வழங்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.