• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புத்தளம் நிலக்கரி மின் நிலையத்தின் அவசர தேவைகளுக்கு எதிர்பாரா சந்தர்ப்பக் கொள்வனவுகளின் கீழ் நிலக்கரி கொள்வனவு செய்தல்
- புத்தளம் நிலக்கரி மின் நிலையத்தின் அவசரமாக தேவைப்படும் நிலக்கரி எதிர்பாரா சந்தர்ப்ப கொள்வனவு என்னும் வழிமுறையின் கீழ் கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக நிலக்கரி மெட்றிக் தொன் ஒன்று 91.85 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வீதம் 300,000 மெட்றிக் தொன் நிலக்கரியினை வழங்குவதற்கான கேள்வியை சிங்கபூர் M/s. Singapore Overseas Enterprises Pte Ltd., நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.