• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தென்மராட்சி பிரதேசத்தின் மீசாலை வடக்கில் புதிய தொழினுட்பக் கல்லூரியொன்றை தாபித்தல்
- யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தரமான வாழ்க்கைத் தொழிற்பயிற்சி வாய்ப்புக்களை இளையோர்களுக்கு வழங்குவதற்காக தொழினுட்ப கல்வி மற்றும் பயிற்சி திணைக்களத்தின் கீழ் தொழிற்படுகின்ற ஒரேயொரு நிறுவகம் யாழ்ப்பாணத்திலுள்ள தொழினுட்ப கல்லூரியாகும். இக்கல்லூரியானது கற்கைநெறி அனுமதிக்காக வருடாந்தம் அண்ணளவாக 8,000 விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்கின்றது. ஆனால் தொழினுட்ப கல்லூரியில் கிடைக்கும் வசதிகள் சுமார் 1,500 பயிலுநர்களுக்கு மாத்திரமே போதுமானதாகும்.

இச்சூழ்நிலையினைக் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, தேசிய வாழ்க்கைத் தொழில் தகைமை (NVQ) மட்டம் 3 மற்றும் 4 தொடர்பிலான சில வாழ்க்கைத் தொழில் கற்கை நெறிகளை தென்மராட்சியின் மீசாலை வடக்கில் தாபிக்கப்படவுள்ள தொழினுட்பக் கல்லூரியில் நடாத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, அடுத்த இரு வருடங்களுக்குள் 560 மில்லியன் ரூபா செலவில் கூறப்பட்ட தொழினுட்ப கல்லூரியை நிருமாணிக்கும் பொருட்டு திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர் சந்திம வீரக்கொடி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.