• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உமாஓயா பல்நோக்கு அபிவிருத்திக் கருத்திட்டத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் சார்ந்த விசேட அனர்த்த முகாமைத்துவ திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
- உமாஓயா பல்நோக்கு அபிவிருத்திக் கருத்திட்டத்தின் சுரங்கப்பாதை அகழ்வின் போது உருவாகியுள்ள நீர் கசிவினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசத்தின் நிலைமையை எதிர்வரும் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழை காலத்தில் உரிய முறையில் முகாமிக்கும் தேவை எழுந்துள்ளது. இதற்காக விசேட முன் ஆயத்த அனர்த்த முகாமைத்துவ திட்டமொன்றை எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக பண்டாரவளை, எல்ல, வெலிமடை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் எதிர்வரும் மழைக்காலத்தில் மண்சரிவு அனர்த்தத்திற்கு ஆளாகக் கூடிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் மண்சரிவு ஆபத்து நிலைமைகளை முன்னதாகவே கண்டறிந்து அவற்றை எந்நேரமும் கண்காணிப்புக்கு உட்படுத்துவதற்கும் அவசர அனர்த்த நிலைமைகள் உருவானால் உடனடியாக செயற்படுவதற்கு இயலுமாகும் வகையில் விசேட அனர்த்த முகாமைத்துவ திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் இந்த பணிகளை கையாள்வதற்கு விசேட அனர்த்த முகாமைத்துவ கையாள்கை நிலையமொன்றை பண்டாரவளை நகரத்திற்கு அண்மையில் தாபிப்பதற்குமாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.