• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஓடங்கள் மீது நிருமாணிக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையத்திற்கு சிலிண்டர் உராய்வு நீக்கி எண்ணை விநியோகித்தல் உட்பட பகிர்ந்தளித்தல் தொடர்பான கேள்வி
- இலங்கை மின்சார சபைக்கு உரியதாகவுள்ள ஓடங்கள் மீது நிருமாணிக்கப்பட்ட 60 மெகாவொட் மின் உற்பத்தி நிலையமானது 4 மின் பிறப்பாக்கி இயந்திரங்களைக் கொண்டுள்ளது. இந்த மின் பிறப்பாக்கி இயந்திரங்களுக்கு எதிர்வரும் ஒரு ஆண்டு காலப்பகுதிக்கு 750,000 லீற்றர் சிலிண்டர் உராய்வு நீக்கி எண்ணை மற்றும் 175,000 லீற்றர் சிஸ்டெம் உராய்வு நீக்கி எண்ணை விநியோகிப்பதற்கும் பகிர்ந்தளிப்பதற்குமான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் சிலிண்டர் உராய்வு நீக்கி எண்ணை லீற்றர் ஒன்று 295.40 ரூபாவுக்கும் சிஸ்டெம் உராய்வு நீக்கி எண்ணை லீற்றர் ஒன்று 253.83 ரூபாவுக்கும் M/s. N.M.Distributors (Pvt.) Ltd., நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.