• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாகும்புர உத்தேச பல்வகை போக்குவரத்து மத்திய நிலையமும் சுற்றாடல் மேம்பாட்டு பணிகளும்
- கொழும்பு தலைநகர போக்குவரத்துச் சேவைகளை விருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சகல போக்குவரத்துச் சேவைகளையும் ஒன்றிணைத்து பொதுமக்களுக்கு வசதிகளை ஏற்பாடு செய்யும் விதத்தில் தெற்கு அதிவேக பாதையின் கொட்டாவை - மாகும்புர இடம்மாறும் மத்திய நிலையத்திற்கு அண்மையிலுள்ள பிரதேசத்தில் பல்வகைப் போக்குவரத்து மத்திய நிலையமொன்றாக மேம்படுத்தும் பணிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு ஒருங்கிணைவாக இந்த பிரதேசத்தில் வர்த்தக, பொழுதுபோக்கு மற்றும் சுற்றாடல் மேம்பாடுகளை செய்வதற்கும் பிரேரிக்கப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் நிதியியைப் பயன்படுத்தி இந்த அபிவிருத்திப் பணிகளை இலங்கை காணி நிலமீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் ஊடாக நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.