• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
றாகமை புனர்வாழ்வு வைத்தியசாலையில் புதிய கிளினிக் கட்டடமொன்றை நிருமாணித்தல்
- புனர்வாழ்வு சிகிச்சை சார்பிலேயே அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள நாட்டின் ஒரே நிறுவனமான றாகமை புனர்வாழ்வு வைத்தியசாலையின் வசதிகளை விருத்தி செய்யும் பொருட்டு புதிய கிளினிக் கட்டடமொன்றை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 195 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s. Link Engineering (Pvt.) Ltd., நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.