• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொரிய குடியரசுக்கும் இலங்கைக்கும் இடையில் பொருளாதார ஒத்துழைப்பு பற்றிய உடன்படிக்கை
- தென் கொரிய குடியரசு கடந்த பல தசாப்தங்களாக பொருளாதார மற்றும் தொழினுட்ப துறைகளில் மிக உயர்ந்த வளர்ச்சியினை ஈட்டியுள்ள, உலக வர்த்தக சந்தையில் தொழினுட்ப துறையின் முன்னேறிய நாடொன்றாக கருதப்படுகின்றது. பங்குடமை முதலீடு, வர்த்தக உறவுகள், சுற்றுலாத்துறை மேம்பாடு மற்றும் கைத்தொழில்துறை ஒத்துழைப்பு போன்ற துறைகள் சம்பந்தமாக தென் கொரிய குடியரசுடன் பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளதோடு, அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் இந்த ஆண்டின் நவெம்பர் மாதத்தில் மேற்கொள்ளவுள்ள தென் கொரியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இதில் கைச்சாத்திடும் பொருட்டு திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.