• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புதிய சிறைக்கூடமொன்றை மன்னார் பிரதேசத்தில் நிருமாணித்தல்
- மன்னாரில் அமைந்துள்ள நீதிமன்றங்களுக்கு ஆற்றுப்படுத்த வேண்டிய சந்தேக நபர்கள் தற்போது வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படுவதோடு, சுமார் 85 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்து வவுனியா சிறைச்சாலையிலிருந்து மன்னார் நீதிமன்றத்திற்கு நாளாந்தம் அவர்களை கொண்டு செல்வதும் கொண்டுவருவதும் கடினமான பணியொன்றாகும். ஆதலால் உரிய வழக்குத் திகதியன்றுக்கு முன்னைய தினம் மன்னார் பிரதேசத்திற்கு அவர்கள் அழைத்துவரப்பட்டு அங்குள்ள சுங்கத் திணைக்களத்திற்குச் சொந்தமான கட்டடமொன்றில் தற்காலிகமாக தடுத்து வைக்கப்படுவதோடு, இந்த கட்டடம் மிகப் பழைமை வாய்ந்த ஒன்றாகையினால் கைதிகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஆகக்குறைந்த வசதிகளையேனும் வழங்குவது கடினமாகவுள்ளது. ஆதலால், சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு நிரந்தர சிறைக்கூடமொன்றை மன்னார் பிரதேசத்தில் நிருமாணிக்கும் தேவையினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, மன்னார் நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு அண்மையில் உப்புகுளம் (தெற்கு) கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு விடுவிக்கப்பட்டுள்ள காணித் துண்டில் புதிதாக சிறைக்கூடமொன்றை நிருமாணிக்கும் பொருட்டு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.