• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1971 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க வணிக கப்பல் சட்டத்தின் கீழ் விதித்துரைக்கப்படும் சிறிய வணிக கப்பல்களை ஒழுங்குறுத்தும் கட்டளைகள்
- சுற்றுலாத்துறையின் விருத்தியுடன் கரையோர பயணிகள் போக்குவரத்து உட்பட, பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்காக சிறிய அளவிலான படகுகளைப் பயன்படுத்தும் பாரிய போக்கொன்று இலங்கையில் உருவாகியுள்ளது. இந்த சிறிய வணிக கப்பல்களை பதிவு செய்தல், மற்றும் ஒழுங்குறுத்துதல் என்பவற்றை முறைப்படுத்தும் நோக்கில் 1971 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க வணிக கப்பல் சட்டத்தின் கீழ் துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சரினால் வௌியிடப்பட்டுள்ள "2017 வணிகக் கப்பல் (சிறிய வர்த்தக படகுகள்) கட்டளைகள்" உள்ளடக்கப்பட்டுள்ள 2017‑05‑04 ஆம் திகதியிடப்பட்டதும் 2017/31 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.