• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆற்றுப் பள்ளத்தாக்கு அபிவிருத்தி, பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவம் சார்பில் வழிமுறையொன்றைத் தயாரித்தல்
- பாதுகாக்கப்பட வேண்டிய நிலப்பிரதேசம் சனத்தொகை அதிகரிப்பினால் முறையற்ற விதத்தில் பயன்படுத்துதல், நகர மயமாக்கல் மற்றும் தொழிற்சாலைமயமாதல் என்பன காரணமாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் போது இலங்கையில் ஆற்றுப் பள்ளத்தாக்கு உட்பட நீரேந்து பிரதேசங்களை உரியமுறையில் பாதுகாக்கும் கடும் தேவை எழுந்துள்ளது. கழிவுகள், பல்வேறுபட்ட இரசாயனப் பொருட்கள் என்பவற்றை இடுவதன் காரணமாக ஆற்றுநீர் மாசடைதல், ஆறுகளிலிருந்து மணல், மாணிக்கக் கல், களிமண் போன்ற பல்வேறுபட்ட கனிம வகைகளுக்காக அகழ்வதனால் ஏற்படும் ஆழமடைதல், கரையோர அரிப்பு, முறையற்ற நிருமாணிப்புகள் போன்ற பல்வேறுபட்ட மனித செயற்பாடுகள் காரணமாக ஆறுகளின் பாதை மாற்றமடைதல், ஆறுகளுக்கான ஒதுக்குப் பிரதேசங்களில் செய்யப்படும் பல்வேறுபட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் காரணமாக உயிரின பல்வகைமை சுற்றாடல் தாக்கத்திற்கு ஆளாதல் போன்ற பிரச்சினைகளை கட்டுப்படுத்துவதற்கு முறையான நிறுவன கட்டமைப்பொன்று தாபிக்கப்பட வேண்டியுள்ளது.

ஆதலால், இலங்கையில் ஆற்றுப் பள்ளத்தாக்கு நீரேந்து பிரதேசங்களின் அபிவிருத்தி, பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவம் என்பன பங்களிப்பு முகாமைத்துவ அணுகுமுறையொன்றின் கீழ் மேற்கொள்வதற்காக நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இதற்காக உரிய சகல அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் விதத்தில் பொருத்தமான வழிமுறையொன்றைத் தயாரிக்கும் பொருட்டு அமைச்சரவையினால் கொள்கை ரீதியில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.