• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
'சூரிய சக்தி சங்ராமய' திட்டத்தின் கீழ் சிறிய அளவிலான சூரிய சக்தி மூல மின் உற்பத்தி நிலையங்களைத் தாபித்தல் - கட்டம் II
- 'சூரிய சக்தி சங்ராமய' நிகழ்ச்சித்திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ் 01 மெகாவொட் வீதமான 60 சூரியசக்தி மூல மின்உற்பத்தி நிலையங்களைத் தாபிப்பதற்கு ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதோடு, இதற்காக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரிப்புகளை மதிப்பிடும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இரண்டாம் கட்டத்தின் கீழ் 01 மெகாவொட் வீதமான 90 சூரியசக்தி மூல மின்உற்பத்தி கருத்திட்டங்களுக்கு வாய்ப்பு வழங்க முடியுமென இலங்கை மின்சார சபையினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக முதலீட்டாளர்களிடமிருந்து பிரேரிப்புக்களை கோரும் போது முதலாம் கட்டத்தில் இதற்காக பின்பற்றப்பட்ட தகுதிவிதிகளை மீளாய்வு செய்து மிகக்கூடுதலான போட்டி நிலைமைகளை உருவாக்குவதற்குத் தேவையான திருத்தங்களுடன் இரண்டாம் கட்டத்தின் 90 கருத்திட்டங்களுக்கான பிரேரிப்புகளை கோரும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.