• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறுவர்களுக்கான பகல்நேர பராமரிப்பு வசதிகளை விரிவுபடுத்துதலும் மேம்படுத்துதலும்
- தற்போது நாட்டின் தேசிய தொழில்வலுவில் பெண்களின் தொழிற்பங்களிப்பு சுமார் 36 சதவீதமாவதோடு, குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்புக்களினால் பெண்கள் தாம் ஈடுபட்டுள்ள தொழில்களிலிருந்து விலகுதல் அல்லது தொழில்களில் ஈடுபடுவதற்கு ஊக்கமில்லாமல் இருத்தல் அவர்களுடைய பங்களிப்பினை மேலும் அதிகரிப்ப தற்காக நிலவும் தடையொன்றாக இனங்காணப்பட்டுள்ளது. நியாயமான விலையில் பெற்றுக் கொள்ளக்கூடிய உயர் தரத்திலான பகல் நேர பராமரிப்பு வசதிகளை நாட்டினுள் அபிவிருத்தி செய்வதன் மூலம் முக்கியமாக உயர் கல்வி மட்டத்திலுள்ள பெண்கள் பெருமளவானோரின் பங்களிப்பு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பயன்படுத்த முடியுமென்பதனால், இந்தத் துறையை கட்டியெழுப்புவதற்கு மேலும் முன்னுரிமை வழங்க வேண்டுமென அரசாங்கத்தினால் இனங்காணப்பட்டுள்ளது.

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புக்கு அமைவாக தற்போது இலங்கையில் அரசாங்க மற்றும் தனியார் துறையின் மூலம் நடாத்திச் செல்லப்படும் 1,200 பகல் நேர பராமரிப்பு நிலையங்களில் சுமார் 24,000 குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றமை தெரியவந்துள்ளது. இதற்கமைவாக, இந்தத் துறையில் நிலவும் பிரச்சினைகளை இனங்கண்டு இலங்கையில் சிறுவர் பகல் நேர பராமரிப்பு வசதிகளை மேலும் விரிவுபடுத்துதல் மற்றும் விருத்தி செய்தல் சம்பந்தமாக ஆராய்வதற்காக அரசாங்கம், மாகாண சபை, அரசசார்பற்ற மற்றும் தனியார்துறை ஆகியவற்றின் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.