• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய கணக்காய்வு சட்டமூலம்
- தேசிய கணக்காய்வு சட்டமூலம் சம்பந்தமாக எழுந்துள்ள பல்வேறுபட்ட கருத்துக்கள் உட்பட ஏனைய நாடுகளில் நிலவும் ஏற்புடையதான சட்டநிலைமைகள் சம்பந்தமாக கவனம் செலுத்தி, இதற்கு பொருத்தமான திருத்தங்களை சிபாரிசு செய்யும் பொருட்டு விசேட கடமைப்பொறுப்புக்கள் அமைச்சர் (கலாநிதி) சரத் அமுனுகம அவர்களின் தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு 2017-08-15 ஆம் திகதியன்று அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைவாக இந்த அமைச்சரவை உபகுழுவின் சிபாரிசுகளுக்கும் ஏனைய அவதானிப்புரைகளுக்கும் அமைவாக கணக்காய்வு சேவைகள் ஆணைக் குழுவினால் அறிக்கையிடும் சந்தர்ப்பமொன்றில் எவரேனும் அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் கவனக்குறைவு, முறைக்கேடான பாவனை, ஏமாற்றுதல் அல்லது ஊழல் காரணமாக அரசாங்கத்திற்கு ஏற்படும் அத்தகைய ஏதேனும் நட்டமொன்றை உரிய உத்தியோகத்தரின் மிகைவிதிப்பாக அறவிடும் அதிகாரம், குறித்த உத்தியோகத்தர் சேவையாற்றும் நிறுவனம் உரியதாகும் அமைச்சின் செயலாளருக்கு கையளிப்பதற்கும் அத்தகைய மேலதிக விதிப்பனவுக்கு ஆட்படுத்தப்படும் எவரேனும் அரசாங்க உத்தியோகத்தர் ஒருவரினால் செய்யப்படும் மேன்முறையீடுகளை விசாரணை செய்வதற்காக தாபிக்கப் படவுள்ள 'மிகை கட்டண மேன்முறையீட்டுக் குழு' சார்பில் பொது நிருவாகம் மற்றும் பொறியியல் போன்ற துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இருவரை உள்ளடக்கி இந்தக் குழுவை விரிவுபடுத்துவது அடங்கலாக உத்தேச திருத்தங்களை சேர்த்து தேசிய கணக்காய்வு சட்டமூலத்தை திருத்துவதற்கு உரியதான தொடர் நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.