• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மருத்துவ பரிசோதனை கையுறைகளையும் அறுவை சிகிச்சை கையுறைகளையும் கொள்வனவு செய்தல்
- மருத்துவ பரிசோதனைகளின் போது பயன்படுத்தப்படும் சிறிய, மத்திய மற்றும் பெரிய அளவுகளில் 92 மில்லியன் இறப்பர் கையுறைகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை 482 மில்லியன் ரூபாவுக்கும் அறுவை சிகிச்சைகளின் போது பயன்படுத்தப்படும் 31 மில்லியன் சோடி தொற்று நீக்கப்பட்ட இறப்பர் கையுறைகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை 1,196 மில்லியன் ரூபாவுக்கும் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் M/s. Sisili Project Consortium (Pvt) Ltd நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.