• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குருதிப் பரிசோதனைக்காக பயன்படுத்தப்படும் Nucleic அமில ஆய்வு சிகிச்சைப் பொருள் 400,000 ம் கொள்வனவு செய்தல்
- தேசிய குருதி சுத்திகரிப்பு சேவைக்கான குருதி வழங்குநர்களினால் வழங்கப்படும் குருதியில் HIV வைரஸ், Hepatitis B மற்றும் C வகுதியைச் சேர்ந்த வைரஸ் இல்லையென உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பயன்படுத்தப்படும் Nucleic அமில ஆய்வு சிகிச்சைப் பொருள் 400,000 ம் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 5.94 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட தொகைக்கு M/s. Apcot Marketing (Pvt) Ltd நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.