• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு மற்றும் ருகுணு பல்கலைக்கழகங்களில் நிருமாணிக்கப்படவுள்ள கட்டிடங்களுக்கான ஒப்பந்தங்களை வழங்குதல்
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, கொழும்பு பல்கலைக்கழகத்தின் தொழினுட்ப பீடத்தை தாபிப்பதற்கான ஒப்பந்தத்தை 1,801 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s. International Construction Consortium (Pvt) Ltd நிறுவனத்திற்கும் றுகுணு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு பரீட்சை மண்டபம், விசேட கிளினிக் நிலையம், சுகாதார கல்வி நிலையம், குடும்ப சுகாதார நிலையம் என்பவற்றுடன் 12 மாடிகளைக் கொண்ட கட்டடமொன்றை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை 850 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s. Link Engineering (Pvt) Ltd நிறுவனத்திற்கும் வழங்கும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.