• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஊக்கமருந்து பாவனையின்றி விளையாட்டில் வெற்றிகளை அடைதல்
- விளையாட்டில் நிலவும் கடும் போட்டிகரமான நிலைமை மற்றும் வர்த்தகபோக்கு என்பன காரணமாக தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து உள்ளடக்கப்பட்ட போசாக்குகளை தெரிந்தோ அல்லது தெரியாமலோ பயன்படுத்தும் போக்கு தற்போது விளையாட்டு வீரர்களுக்கிடையில் காணக்கூடியதாகவுள்ளது. இதன் பாதிப்பு எதிர்வரும் சருவதேச போட்டிகளின் போது தோன்றுவதற்கு இடமுள்ளமையினால் இந்த நிலைமைகளை தவிர்த்துக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டியுள்ளது. ஆதலால், தேசிய மற்றும் பாடசாலை மட்ட விளையாட்டு வீரர்களுக்கும், அவர்களுடைய பெற்றோர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் அதேபோன்று விளையாட்டுத்துறை முகாமையாளர்களுக்கும் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து வழிமுறை பற்றி அறிவூட்டுவது பொருத்தமானதாகும்.

இதற்கமைவாக, விளையாட்டின் பண்பினை பாதுகாத்து தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளற்ற விளையாட்டினை மேம்படுத்துவதற்கு தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகள் மற்றும் வழிமுறைகள் பற்றி அறிவூட்டும் நிகழ்ச்சித்திட்ட மொன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனை தொடர்பிலான பரிசோதனையை இலங்கையில் மேற்கொள்ளும் வசதிகளை உருவாக்குவதற்கும் தேவையான நிதியினை இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவராண்மைக்கு பெற்றுக் கொள்ளும் பொருட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.