• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்ளூராட்சி அதிகாரசபைகளினால் அறவிடப்படும் வரி, அனுமதிப்பத்திர கட்டணங்கள் உட்பட பிற கட்டணங்களை ஒழுங்குறுத்துவதற்கான வழிமுறையொன்றைத் தயாரித்தல்
- உள்ளூராட்சி அதிகாரசபைகளினால் அவற்றின் அதிகாரபிரதேசங்களினுள் அமைந்துள்ள காணிகள் மற்றும் கட்டடங்களுக்குரியதாக வீத வரிகளை அறவிடும் போதும் சில சேவைகளை செய்யும் போதும் அறவிடப்படும் கட்டணங்களின் அளவு சம்பந்தமாக பொதுக் கொள்கையொன்று இல்லாமையினால் பொதுமக்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதாக முறைபாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதிப்பீட்டு அட்டவணையில் பெயர்களை திருத்துதல், கட்டட, காணித் துண்டு அபிவிருத்தி திட்டங்களை சமர்ப்பித்தல், இசைவாக்க சான்றிதழ்களை வழங்குதல், தொலைபேசி தூண்களுக்கான கட்டணங்களை அறவிடுதல் போன்ற விடயங்களுக்காக செய்யப்படும் விண்ணப்பக்கட்டணங்கள், வர்த்தக நிலையங்களுக்காக அறவிடப்படும் உரிமப்பத்திர கட்டணங்கள் மற்றும் வீத வரிகள் என்பன சில சந்தர்ப்பங்களில் நியாயமான அடிப்படையிலல்லாது தீர்மானிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, உள்ளூராட்சி அதிகாரசபைகளினால் அறவிடப்படும் பல்வேறுபட்ட வரிகள் உட்பட கட்டணங்கள் தொடர்பில் தேசிய மட்டத்தில் மீளாய்வொன்றினைச் செய்வதற்கு தனது அமைச்சின் செயலாளரின் தலைமையில் உத்தியோகத்தர்கள் குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.