• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கால்நடை புலனாய்வு நிலையங்களில் கோழி மற்றும் மீன் இன நோய்களை இனங்காணுதலும் கவனமான கண்காணிப்பு வசதிகளை மேம்படுத்துதலும்
- கடந்தகாலப் பகுதியில் கோழி வளர்ப்பு, இறால் செய்கை மற்றும் அழகுமீன் வளர்ப்பு போன்ற தொழில்களில் உயர் விருத்தி ஏற்பட்டுள்ளதோடு, முக்கியமாக இறால் செய்கை மற்றும் அழகுமீன் வளர்ப்பு அந்நிய செலாவணியைப் பெற்றுத் தரும் துறைகளாகும். இவை பல்வேறுபட்ட நோய்களுக்கு ஆளாவதை கட்டுப்படுத்துதல், நோய்களை இனங்காணுதல் உட்பட அவற்றுக்கு எதிராக துரிதமாக செயற்படுதல் என்பவற்றுக்கான வசதிகளை செய்வது காலத்தின் தேவையாகும்.

ஆதலால், இந்த கைத்தொழிலின் அபிவிருத்திக்கு பங்களிப்பு நல்கும் நோக்கில். கோழி மற்றும் மீன் இன நோய்களை இனங்காண்பதற்கும் நோய்களின் கவனமான கண்காணிப்புக்காகவும் வாரியபொல, சிலாபம் மற்றும் வெலிசர ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள கால்நடை புலனாய்வு நிலையங்களில் இரசாயனகூட வசதிகளை சருவதேச தரத்திற்கு அமைவாக விருத்தி செய்யும் பொருட்டு கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அத்துடன் இந்த நிலையங்களில் சேவை புரிந்துகொண்டிருக்கும் கால்நடை மருத்துவர்களுக்கு மீன் நோய் நிவாரணம் சம்பந்தமாக நிபுணத்துவ அறிவினைப் பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டமொன்றை கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து தயாரிப்பதற்கும்கூடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.