• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அங்கொட பிரதேசத்தில் புதிதாக நிருமாணிக்கப்பட்டு வரும் மாடி வீட்டு கட்டடத் தொகுதியிலுள்ள வீடுகளை விற்பனை செய்தல்
- "நகர புத்துயிரளிப்பு கருத்திட்டத்தின்" கீழ் கொழும்பு நகரத்தில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை குடியமர்த்துவதற்காக 500 வீட்டு அலகுகளைக் கொண்ட மாடி வீட்டு தொகுதியொன்று அங்கொட வைத்தியசாலை மனையிடத்தில் 05 ஏக்கர் காணித் துண்டொன்றில் நிருமாணிக்கப்பட்டு வருகின்றது. இதன் வேலைகள் பூர்த்தியடையும் நிலையில் உள்ளன. ஆயினும் பல்வேறுபட்ட காரணங்களினால் கொழும்பு நகரத்தினுள் குடியிருக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் கொழும்பு நகர எல்லைக்கு வௌியிலுள்ள பிரதேசங்களில் குடியமர்த்துவில் நடைமுறை பிரச்சினைகள் எழுந்துள்ளன.

ஆதலால், 4-5 மில்லியன் ரூபாவுக்கு இடைப்பட்ட தொகைக்கு விலை நிர்ணயிக்கக்கூடிய இந்த வீட்டு அலகுகளை பத்திரிகை விளம்பரத்தின் மூலம் விண்ணப்பங்கள் கோரி முப்படை உறுப்பினர்களும் அடங்கலாக கீழ் மத்திய வகுப்பைச் சேர்ந்த அரசாங்க ஊழியர்கள், கலைஞர்கள், சிறிய மற்றும் மத்தியதர தொழில்முயற்சியாளர்கள், சமூகசேவையாளர்கள் போன்ற குழுக்களுக்கு விற்பனை செய்யும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.