• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலத்திரனியல் (மெக்கட்ரோனிக்ஸ்) விஞ்ஞானதுறையை அபிவிருத்தி செய்வதன் மூலம் பொருளாதாரத்தை பலப்படுத்துதல்
- அபிவிருத்தி அடைந்த அதேபோன்று அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் பொருளாதாரத்தில் இலத்திரனியல் விஞ்ஞானம் முக்கிய இடத்தை கொண்டுள்ளது. இந்த துறைசார்பில் மேற்கொள்ளப்படும் முதலீட்டிலிருந்து அதுபோன்று 15மடங்கு கூடிய நலன்களை பெற்றுக் கொள்ள முடியுமென பிற நாடுகளின் அனுபவத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இலங்கையில் இந்தத் துறையை அபிவிருத்தி செய்வதன் மூலம் உயர் தொழினுட்ப ஏற்றுமதிகளை மேம்படுத்துதல், நாட்டின் உற்பத்தி துறைசார்பில் பயன்படுத்தக்கூடிய உயர் தொழினுட்ப இயந்திரங்களை நிருமாணிப்பதன் மூலம் இறக்குமதி செலவுகளைக் குறைத்தல், சிறந்த பயிற்சி பெற்ற இலங்கை இளைஞர்களுக்கு உயர் சம்பளத்துடன் கூடிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற நன்மைகளை பெற்றுக் கொள்ளலாம். இதற்கமைவாக, இலத்திரனியல் (மெக்கட்ரோனிக்ஸ்) விஞ்ஞானம் தொடர்புபட்ட கம்பனிகள் சார்பில் உற்பத்தி வடிவமைத்தல் பொறியியல் பூங்காவொன்றை (Product Design Engineering) ஹோமாகம, பிட்டிபன பிரதேசத்திலுள்ள இலங்கை நனோ தொழினுட்ப நிறுவனத்தில் தாபிப்பதற்கும் இதன் முகாமைத்துவ பணிகளை தேசிய பொறியியல் ஆராய்ச்சி, அபிவிருத்தி நிலையத்திற்கு கையளிப்பதற்குமாக விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.