• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Hydroflurocarbons - HFC கட்டம் கட்டமாக மட்டுப்படுத்தல் பற்றிய மொன்ரியல் உடன்படிக்கைக்கு மேற்கொள்ளப்பட்ட Kigali திருத்தத்திற்கு இலங்கை ஒப்புதலளித்தல்
- ஓசோன் படலத்திற்கு சேதம் விளைவிக்கும் இரசாயன பாவனையை ஒழுங்குறுத்தி அவற்றை முறையாகவும் கட்டம் கட்டமாகவும் பாவனையிலிருந்து அப்புறப்படுத்துவதற்கு உலக சமூகத்தினரினால் 1987 ஆம் ஆண்டில் மொன்ரியல் உடன்படிக்கையானது செய்து கொள்ளப்பட்டது. இலங்கை இந்த உடன்படிக்கையின் ஒருதரப்பாவதோடு, இந்த உடன்படிக்கைக்கு காலத்திற்கு காலம் செய்யப்பட்டுள்ள திருத்தங்களுக்கும் அதன் ஒத்திசைவினை தெரிவித்துள்ளது. மொன்ரியல் உடன்படிக்கையில் செய்யப்பட்ட இறுதி திருத்தமானது 2016 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 15 ஆம் திககதி ருவண்டாவின் கிகாலி நகரத்தில் மேற்கொள்ளப்பட்டதோடு, இதன்போது உலக வெப்ப நிலை அதிகரிப்பினை கட்டுப்படுத்துவதற்கு 2050 ஆம் ஆண்டளவில் உலக வெப்ப நிலைக்கு காரணமாய் உள்ள Hydroflurocarbons (HFC) போன்ற ஓசோன் படலத்தை சேதப்படுத்தும் இரசாயன பொருட் பாவனையை கட்டம் கட்டமாக மட்டுப்படுத்தும் பொருட்டு சகல தரப்பினர்களும் உடன்பட்டுள்ளனர்.

இதற்கமைவாக, இலங்கையில் கைத்தொழில் துறைக்கும் பொருளாதாரத்திற்கும் தாக்கத்தை ஏற்படுத்தாத விதத்தில் Hydroflurocarbons பாவனையை வரையறுப் பதற்குத் தேவையான நடவடிக்கைகளும் அறிவூட்டல்களும் ஏற்கனவே ஆரமபிக்கப்பட்டுள்ளமையை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, Kigali திருத்தத்திற்கு இலங்கை செயல்வலுவாக்கம் அளிப்பதற்கும் இதுபற்றி பாராளுமன்றத்திற்கு அறிவிப்பதற்குமாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.