• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உரித்து உடைமை செயற்பாட்டினை முறைப்படுத்துதலும் Cadastral வரைபடம் தயாரிக்கும் நடவடிக்கையை நவீனமயப்படுத்துதலும்
- முறைசார்ந்த நிலஅளவைத்திட்டங்களின்றி வதிவிட, கமத்தொழில் மற்றும் ஏனைய நோக்கங்கள் கருதி அரசாங்கத்தினால் பொது மக்களுக்கு கையளிக்கப்பட்ட கிட்டத்தட்ட 2.5 மில்லியன் காணித் துண்டுகளை நிலஅளவை செய்தல் மற்றும் வரைபடத்தை தயாரித்தல் அத்துடன் நாடளாவிய ரீதியிலுள்ள தனியார் காணித் துண்டுகளுக்கான தௌிவான நிலஅளவைத்திட்டங்களுடன் கூடிய உரித்துச் சான்றிதழ்களை வழங்குதல் ஆகியன காலத்தேவையாக மாறியுள்ளன. இச்சூழமைவில், அபிவிருத்தியடைந்த நாடுகளினால் பாவிக்கப்படும் தொழினுட்ப மற்றும் தொழில்சார் முறைமைகளை பின்பற்றுவதன் மூலம் நிலஅளவை செய்யும் மற்றும் உரித்துச் சான்றிதழ்களை வழங்கும் செய்முறையினை நவீனமயப்படுத்தும் தேவையுள்ளது.

அதற்கிணங்க, கூறப்பட்ட நவீனமயப்படுத்தல் செய்முறையினை மேற்கொள்வதற்கென ஐக்கிய அமெரிக்க நாடுகளின் Trimble Inc. நிறுவனத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட கருத்திட்ட பிரேரிப்பிலுள்ள விடயங்கள் பற்றி இணக்கப் பேச்சுக்களை நடாத்துவதற்கு வௌிநாட்டுவளத் திணைக்களத்திற்கு அதிகாரமளிக்கும் பொருட்டும் பிரதான கருத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் தொழினுட்ப சாத்தியப்பாடு பற்றி ஆராய்வதற்கென முன்னோடிக் கருத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கும் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.