• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் நகரங்களுக்கான உடல் ஆரோக்கியம் மற்றும் சுகாதார முன்னெடுப்பு கருத்திட்டத்தின் அமுலாக்கத்திற்கான தொழினுட்ப உதவியினைப் பெற்றுக் கொள்ளுதல்
- நீர்கொழும்பு, காலி மற்றும் களனி பிரதேசங்களில் சாக்கடைத் தொகுதி சேவைகளை முன்னேற்றும் மற்றும் தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபையினால் செயற்படுத்தப்பட்டுவரும் பாரியளவிலான சாக்கடைத் தொகுதி முகாமைத்துவத்திற்கான இயலளவை தரமுயர்த்தும் குறிக்கோளுடன், நகரங்களுக்கான உடல் ஆரோக்கியம் மற்றும் சுகாதார முன்னெடுப்பு கருத்திட்டமானது இலங்கையில் தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. கூறப்பட்ட கருத்திட்டத்தின் கருத்திட்ட முகாமைத்துவ அலகிற்கு உரிய தொழினுட்ப உதவியினை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட மதியுரை கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, 01 மில்லியன் யூரோ மற்றும் 5.8 மில்லியன் ரூபா கொண்ட தொகைக்கு M/s. Egis Eau நிறுவனத்துக்கு கையளிக்கும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.