• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அநுராதபுரம் வடக்கு நீர்வழங்கல் கருத்திட்டத்தின் கட்டம் I இற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
- அநுராதபுர மாவட்டத்தில் வாழும் மக்களுக்கும் அத்துடன் விசேடமாக சிறுநீரக நோய் அதிகமாக காணப்படும் பிரதேசங்களுக்கும் பாதுகாப்பான குடிநீரை வழங்கும் அவசியத்தை கருத்திற் கொண்டு, அநுராதபுரம் வடக்கு நீர்வழங்கல் கருத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றது. அநுராதபுரம் வடக்கு நீர்வழங்கல் கருத்திட்டத்தின் கட்டம் I இற்கு அவசியமான குழாய்கள் மற்றும் தேவைப்படும் உபகரணம் என்பவற்றின் வழங்கலுக்கான ஒப்பந்தத்தை, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் பெறுமதிசேர் வரி (VAT) இன்றி 1,197.46 மில்லியன் யென் மற்றும் 1,275.75 மில்லியன் இலங்கை ரூபா கொண்ட தொகைக்கு M/s. Nagarjuna Construction Company Ltd நிறுவனத்தினதும் M/s. Sierra Construction (Pvt) Ltd நிறுவனத்தினதும் கூட்டு தொழில் முயற்சிக்கு கையளிக்கும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.