• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கண்டி மஹய்யாவ நகர வீடமைப்புக் கருத்திட்டம்
- கண்டி மாநகர அதிகார பிரதேசத்தில் சுமார் 12 ஏக்கர் நிலப் பிரதேசத்தில் பரந்துள்ள மஹய்யாவ குடியேற்றத்தில் சுமார் 1,220 குடும்பங்கள் வசிக்கின்றனர். மிகவும் முறையற்ற நிருமாணிப்புகள் காரணமாக சமூக, பொருளாதார மற்றும் சுகாதார பிரச்சினைகள் மத்தியில் வசிக்கும் இந்த குடும்பங்களுக்கு வீடுகளை வழங்கி அவர்களுடைய வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் அடிப்படை நோ்ககில் "கண்டி மஹய்யாவ நகர வீடமைப்புக் கருத்திட்டமானது" நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, கண்டி நகர அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்த கருத்திட்டமொன்றாக 1,220 மாடி வீட்டு அலகுகளாக இரண்டு கட்டங்களின் கீழ் நிருமாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான காணி நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு உடைமையாக்கிக் கொள்வதற்கும் இந்த கருத்திட்டத்தின் கீழ் நிருமாணிக்கப்பட்டு வரும் வீடுகளின் தனி உரிமையை நிதி அறவிடாமல் பயனாளிகளுக்கு வழங்குவதற்குமாக விசேட கடமைப்பொறுப்புக்கள் அமைச்சர் (கலாநிதி) சரத் அமுனுகம அவர்களினாலும் வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினாலும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது