• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் ஹங்கேரிக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கை
- கடந்தகாலப் பகுதியில் வௌிநாட்டு வர்த்தகத்தில் துரித வளர்ச்சியினை அடைந்துள்ள ஹங்கேரியுடன் நிலவும் பொருளாதார ஒத்துழைப்பினை பலப்படுத்திக் கொள்வதன் மூலம் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் சந்தையை விரிவுபடுத்துவதற்கு இலங்கைக்கு ஆற்றல் கிடைக்கும். ஆதலால், முதலீட்டினை அதிகரிக்கும் அத்துடன் பொருளாதார மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்பினை அதிகரிக்கும் நோக்கில் இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார ஒத்துழைப்பிற்கான உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது