• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொருளாதாரத்தை டிஜிட்டல் மயப்படுத்தல்: 2016 - 2019
- 'பொருளாதாரத்தை டிஜிட்டல் மயப்படுத்தல்' கருத்திட்டத்தின் கீழ், டிஜிட்டல் உட்கட்டமைப்பின் துரித அபிவிருத்தி மற்றும் இணைப்பு மீது அரசாங்கமானது அதன் கவனத்தை செலுத்தியுள்ளதுடன் பொதுச் சேவை வழங்கலின் தரத்தினை இது மேம்படுத்தும். அதற்கிணங்க, இலங்கை தகவல், தொலைத்தொடர்பாடல் தொழினுட்ப முகவராண்மையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தி தந்திரோபாயங்களுடன் ஒத்திசைவாக, 2016 - 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், 2017 ஆம் ஆண்டின் வரவுசெலவுத்திட்ட நிதி ஏற்பாடுகளுக்குள் 27 கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொருட்டு தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது