• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் தொற்றாத நோய் அதிகரிப்பதை கட்டுப்படுத்துவதற்கான சமூகம்சார் விளையாட்டு அபிவிருத்தி
- தொற்றாத நோய்களுடன் தொடர்புறும் ஆபத்தானது ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள், புகையிலை மற்றும் மதுபான பாவனை மற்றும் உடலியக்கமின்மை ஆகிய காரணங்களினால் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது. விசேடமாக, தேக அப்பியாசங்களில் ஈடுபடாத ஆட்கள் இருதய நோய்களுக்கான உயர்வான சாத்தியக்கூறு கொண்டவர்களாக மாறியுள்ளனர். தேக அப்பியாசங்களில் கூடுதலாக ஈடுபடுதல் மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்கங்களை கைக்கொள்ளல் மூலம் நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களை தடுக்க முடியுமென்பதை ஆய்வுகள் வௌிக்கொணர்ந்துள்ளன.

பொதுமக்களுக்கிடையில் விளையாட்டுக்களை மேம்படுத்துவதன் மூலம், தேக அப்பியாசங்களில் ஈடுபடுவதற்கு கூடுதலான வாய்ப்புக்களை அவர்களுக்கு வழங்கும் சாத்தியம் காணப்படும்.. அதற்கிணங்க, அடுத்த மூன்று (03) ஆண்டுகளுக்குள் தேக அப்பியாசங்களில் ஈடுபடும் சமுதாய வீதத்தை 10% சதவீதத்தினால் அதிகாிக்கும் நோக்குடன், சமூகம்சார் விளையாட்டு அபிவிருத்திக்கான கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் கொள்கையளவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.