• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விளையாட்டுத்துறை நவீனமயப்படுத்தல் கருத்திட்டம்
- சருவதேச போட்டிகளை மையப்படுத்தி விளையாட்டு வீரர், வீராங்கனை களுக்கான முறைமை சார்ந்த பயிற்சியொன்றை வழங்குதல் மற்றும் நிபுணத்துவம் பெற்ற பயிற்றுவிப்பாளர்களிடமிருந்து இலங்கையின் உள்நாட்டு விளையாட்டுத்துறை பயிற்றுவிப்பாளர்களுக்கு விஞ்ஞான முறையிலான பயிற்சியினை வழங்குதல் ஆகியவற்றை உத்தேசமாகக் கொண்டு 2013 - 2017 வரையான காலப்பகுதியில் விளையாட்டுத்துறை நவீனமயப்படுத்தல் கருத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. வௌிநாட்டு பயிற்றுவிப்பாளர்களின் சேவைகளை பெற்றுக் கொள்வதன் மூலம், சகல மாகாணங்களிலும் உள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் திறன்களையும் பயிற்றுநர்களின் அறிவையும் மேம்படுத்துவதற்கு இது பெரிதும் உதவியுள்ளது.

பொதுநலவாய விளையாட்டுக்கள் மற்றும் ஆசியான் விளையாட்டுக்கள் என்பன 2018 ஆம் ஆண்டிலும் தெற்காசிய விளையாட்டுக்கள் மற்றும் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் என்பன 2020 ஆம் ஆண்டிலும் நடாத்தப்படுவதற்கு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கிணங்க, இப்போட்டிகளுக்காக நாட்டின் கனிஷ்ட மட்டத்திலுள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அவசியமான முறைசார்ந்த பயிற்சியினை வழங்கும் நோக்குடன் 2018 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டுவரையான 05 வருட மேலதிக காலப்பகுதியொன்று சார்பில் விளையாட்டுத்துறை நவீனமயப்படுத்தல் கருத்திட்டத்தின் காலப்பகுதியை நீடிக்கும் பொருட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.