• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விலங்கு உற்பத்தி, சுகாதார திணைக்களத்திற்கு 100 போயர் இன ஆடுகளை இறக்குமதி செய்தல்
- சுற்றுலா தொழிலின் மேம்பாடு அதேபோன்று பல்வேறுபட்ட சமூகம் சார்ந்த காரணங்களினால் மாட்டிறைச்சியின் நுவர்வு குறைவடைந்துள்ளமைக்கு ஒருங்கிணைவாக ஆட்டிறைச்சி நுகர்வுக்கான கேள்வி அதிகரித்துள்ளது. ஆயினும் நாட்டில் ஆட்டிறைச்சி உற்பத்தியானது இந்தக் கேள்வியை நிறைவு செய்வதற்கு போதுமானதாகவில்லை.

இதற்கமைவாக, நாட்டில் ஆட்டிறைச்சி உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் ஆடுகளின் இனப்பெருக்க நடவடிக்கைகள் , வர்த்தகப் பண்ணைகளுக்கு ஆடுகளை வழங்குதல் சார்பில் விலங்கு உற்பத்தி, சுகாதார திணைக்களத்தின் மூலம் போயர் இன 90 மறிஆடுகளை ஆடுகளையும் 10 கடா ஆடுகளையும் இறக்குமதி செய்யும் பொருட்டு கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.