• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புதிய நீதிமன்ற கட்டடங்களை நிருமாணித்தல்
- நீதியை நிலைநாட்டும் செயற்பாட்டினை துரிதமாகவும் வினைத்திறனுடனும் செய்வதற்காக அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதன் போது பொதுமக்களுக்கு சிறந்த மட்டத்திலான சேவையினை வழங்கும் நோக்கில் தற்போது மிகப் பழமைவாய்ந்த கட்டடங்களில் குறைந்த வசதிகளின் கீழ் நடாத்திச் செல்லப்படும் நீதிமன்றங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, கஹட்டகஸ்திகிலிய மற்றும் மதவாச்சி ஆகிய சுற்றுலா நீதவான் நீதிமன்றங்கள், வலஸ்முள்ள மாவட்ட / நீதவான் நீதிமன்றங்கள், மாத்தளை உயர்நீதிமன்றம் மற்றும் கல்வி சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகிய நீதிமன்றகள் சார்பில் 491 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டு செலவில் புதிய கட்டட வசதிகளை வழங்கும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நீதி அமைச்சர் (திருமதி) தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.