• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2000 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க இலங்கை வர்த்தக மத்தியஸ்த நிலைய சட்டத்தைத் திருத்துதல்
- இலங்கையில் வர்த்தக மத்தியஸ்த நிலையங்களைத் தாபிப்பதற்காக 2000 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க இலங்கை வர்த்தக மத்தியஸ்த நிலைய சட்டத்தின் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறித்த வர்த்தக மத்தியஸ்த நிலைய பணிகளின் நிருவாகம் மற்றும் முகாமைத்துவத்திற்காக முகாமைத்துவ சபையொன்று உள்ளதோடு, இதற்கு உரிய துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர்.

வரிசை நிறுவனங்கள் மற்றும் முகவராண்மைகளுடன் நிலவும் ஒருங்கிணைப்பினை பலப்படுத்தி இலங்கை வர்த்தக மத்தியஸ்த நிலையத்தின் செயலாற்றுகையை மேம்படுத்துவதற்கு அதன் முகாமைத்துவ சபையின் கட்டமைப்பினை மாற்றுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் பொருட்டு தயாரிக்கப்பட்டுள்ள இலங்கை வர்த்தக மத்தியஸ்த நிலைய (திருத்த) சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி அமைச்சர் (திருமதி) தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.