• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நேபாளத்தில் இடம்பெற்ற நில நடுக்கத்தினால் சேதமடைந்த மத வழிபாட்டுத்தலங்களை புனரமைத்தல்
- 2015 ஆம் ஆண்டில் நேபாளத்தில் இடம்பெற்ற நில நடுக்கத்தினால் சேதமடைந்த சுவாயம்புநாத்ஹில் ஆனந்தகுட்டி மகாவிகாரையினதும் ராதோ மச்சிந்திரநாத் கோவிலினதும் புனரமைப்புப் பணிகளுக்கு இலங்கையினால் அனுசரணை வழங்கப்படுவதோடு, இந்த நிருமாணிப்புப் பணிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த புனரமைப்பு பணிகளுக்குரிய ஆரம்ப வடிவமைப்புக்கு பின்னர் செய்யப்பட்ட சில திருத்தங்கள் காரணமாக 345 மில்லியன் ரூபாவாக இருந்த அதன் மதிப்பீட்டு செலவு அதிகரித்துள்ளது. ஆதலால், இந்த மேலதிக செலவினை தழுவுவதற்காக 105 மில்லியன் ரூபாவைக் கொண்ட மேலதிக நிதி ஏற்பாட்டினை ஒதுக்கிக் கொள்ளும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினாலும் புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.