• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தங்கல்ல மீன்பிடித் துறைமுகத்தை பல்பணி மீன்பிடித் துறைமுகத் தொகுதியொன்றாக அபிவிருத்தி செய்தல்
- கடற்றொழில், சுற்றுலா, மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் பல்பணி மீன்பிடித் துறைமுகத் தொகுதியொன்றாக தங்கல்ல மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்குரியதான சாத்தியத் தகவாய்வு அறிக்கையையும் வடிவமைப்பையும் இலவசமாக தயாரித்து வழங்குவதற்கு தென் கொரிய குடியரசின் HAE CHUN Co LTD கம்பனி உடன்பாடு தெரிவித்துள்ளது. இது சம்பந்தமாக இந்த கம்பனியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுவதற்கு கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.