• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு-03, பெரஹெர மாவத்தையில் அமைந்துள்ள காணித் துண்டுகளை ஶ்ரீ தர்மகீர்த்தி ஆராமயவிற்கு வழங்குதல்
- பொல்வத்தை ஶ்ரீ தர்மகீர்த்தி ஆராமயவிற்கு நுழைவுப் பாதையொன்றை அமைத்துக் கொள்வதற்காக கொழும்பு-03, பெரஹெர மாவத்தையில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான 19.7 பேர்ச்சஸ் விஸ்தீரணம் கொண்ட காணித் துண்டொன்றை இறையிலிக் கொடையாக இந்த விகாரையின் நிருவாக சபைக்கு குறித்தொதுக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.