• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி கருத்திட்டத்திற்கு தேவையான கடல் மணலைப் பெற்றுக்கொள்ளல்
- கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி கருத்திட்டத்தின் நிலமீட்பு நோக்கங்களை நிறைவு செய்வதற்காக தற்போது இந்த கருத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள கடல்மணல் அகழ்வுகளிலுள்ள மணல் போதுமானதாக இல்லையென்பது தெரியவந்துள்ளது. இந்த கருத்திட்டத்திற்கு மணல் சுமார் 40 மில்லியன் கியுபிக் மீற்றர்கள் மேலும் தேவையென மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மணலினை இலங்கை காணி நிலமீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் நோக்கங்களுக்காக குறித்தொதுக்கப்பட்டுள்ள கடல் மணல் அகழ்வுகளிலிருந்து பெற்றுக் கொள்ளும் சாத்தியம் நிலவுகின்றது.

கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி கருத்திட்டத்திற்குரிய முற்தரப்பு உடன்படிக்கைக்கு அமைவாக இதற்குத் தேவையான மணலைப் இலவசமாக வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் கட்டுப்பட்டுள்ளது. ஆயினும், மணல் வழங்கும் போது ஏற்கவேண்டி நேரிடுகின்ற நிருவாக செலவுகள் உட்பட ஏனைய செலவுகளாக 02 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை கொழும்பு துறைமுக நகர கருத்திட்ட கம்பனியிடமிருந்து இலங்கை காணி நிலமீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு ஒரே தடவையில் அறவிட்டுக் கொள்வதற்கு உட்பட்டு, இந்த மணலினை கருத்திட்டத்திற்காக வழங்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.