• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2017 ஆம் ஆண்டில் 18 மேலதிக நகர அபிவிருத்தி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
- 2017 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் கீழ் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கு திறைசேரியினால் ஒதுக்கப்பட்ட நிதி ஏற்பாடுகளைப் பயன்படுத்தி நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள 20 மில்லியன் ரூபாவுக்கு கூடுதலான பெறுமதி கொண்ட 39 கருத்திட்டங்களுக்கு ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகாரசபையின் மூலம் 2017 ஆம் ஆண்டிலேயே நடைமுறைப்படுத்தக்கூடிய மேலும் 18 கருத்திட்டங்கள் இனங்காணப் பட்டுள்ளதோடு, இந்த கருத்திட்டங்களையும் அமைச்சுக்காக ஒதுக்கப்பட்டு தொடர்ந்தும் சேமிப்பாகவுள்ள நிதி ஏற்பாடுகளை பயன்படுத்தி நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.