• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறியரக லொறிகள், சிங்கள் கெப்வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மீதான சுங்க வரியைக் குறைத்தல் சம்பந்தமாக வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- 2017‑08‑18 ஆம் திகதியிலிருந்து செயல்வலுவுக்கு வரத்தக்கதாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளுக்கு அனுசரணையாக சிறியரக லொறிகள், சிங்கள் கெப்வண்டிகள் இறக்குமதி செய்யும் போது அதற்குரியதான உற்பத்தி வரியை வாகனமொன்றுக்கு 300,000/- ரூபாவால் குறைப்பதற்கும் எஞ்சின் ஆற்றல் கனசென்றி மீற்றர் 150 இற்கு குறைவான மோட்டார் சைக்கில்களுக்கான நூற்றுவீத பெறுமதியின் மீது விதிக்கப்பட்டிருந்த வரியை நீக்கி தரத்தில் உயர் மோட்டார் சைக்கிள்களுக்கு சந்தை வாய்ப்பினை உருவாக்குவதற்கும் அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் சார்பில் ஏற்பாடுகளைச் செய்யும் பொருட்டு 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் வௌியிடப்பட்டுள்ள 2017‑08‑17 ஆம் திகதியிடப்பட்டதும் 2032/31 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.