• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி செயற்பாட்டின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் சலுகை கடன் திட்டம்
- விவசாயிகள், தொழில்முயற்சியாளர்கள், சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிலாளர்கள் உட்பட சுயதொழில்களில் ஈடுபடுபவர்கள் ஆகியோர்களை குறியிலக்காகக் கொண்டு 2017 வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளுக்கு அமைவாக அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட "ரன் அஸ்வென்ன", "கொவி நவோதா", "ரிய சக்தி", "ரிவி பலசவி", "திரி சவிய", "ஜய இசுர", "மாத்ய அருண", "சொந்துரு பியச" ஆகிய 08 சலுகை கடன் திட்டங்கள் தற்போது வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த கடன் திட்டத்தின் கீழ் 2017‑09‑15 ஆம் திகதியிலிருந்து 1266 பயனாளிகள் சார்பில் 6,517 மில்லியன் ரூபா கடன் உதவி அரசாங்க மற்றும் தனியார் வங்கிகளின் ஊடாக வழங்கப்பட்டுள்ளதென நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.