• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்கத்திற்குச் சொந்தமான தொழில்முயற்சிகள் சார்பில் கூட்டிணைந்த செயல் நோக்க கூற்றுகளை அறிமுகப்படுத்துதல்
- வர்த்தகம் மற்றும் வர்த்தகம் சாரா பணிகளில் ஈடுபடும் அண்ணளவாக 400 அரசாங்க தொழில்முயற்சிகள் நாட்டில் செயற்படுகின்றன. இதில் வர்த்தக செயற்பாடுகள் மூலம் வருமானம் ஈட்டும் 55 அரசாங்க தொழில்முயற்சிகள் அவற்றின் முக்கியத்துவம் கருதி அரசுடமை வர்த்தக தொழில்முயற்சிகளாக (State Owned Business Enterprises) வகுப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அரசாங்க தொழில்முயற்சிகளின் வருடாந்த செயலாற்றுகையை விருத்தி செய்யும் முகாமைத்துவ வழிமுறையொன்றாக "கூட்டிணைந்த செயல்நோக்க கூற்றுக்கள்" என்பதனை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக பொருளாதாரத்தில் மிக முக்கியமானதும் உயர் வினைத்திறனுடன் செயற்படுவது தேவையானதுமென கருதப்படும் ஐந்து (05) வர்த்தக தொழில்முயற்சிகளை தெரிவு செய்து இந்த நிறுவனங்களுடன் கூட்டிணைந்த செயல்நோக்க கூற்றுக்கள் ஏற்கனவே கைச்சாத்திடப்பட்டுள்ளது.

பொருளாதார அபிவிருத்திக்கு அரசாங்க தொழில்முயற்சிகளின் பங்களிப்பினை விருத்தி செய்யும் நோக்கில் ஏனைய அரசாங்க தொழில்முயற்சிகள் சார்பிலும் கூட்டிணைந்த செயல்நோக்க கூற்றுக்கள் அறிமுகப்படுத்தும் நடவடிக்கை யொன்றாக தெரிவுசெய்யப்பட்ட மேலும் பத்து (10) தொழில்முயற்சிகளுடன் 2018 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வரும் விதத்தில் கூட்டிணைந்த செயல்நோக்க கூற்று உடன்படிக்கைகளை செய்துகொள்ளும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.