• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய அவசரகால செயற்பாட்டுத் திட்டம்
- அனர்த்த நிலைமைகளின் போது தேடுதல், காப்பாற்றுதல் மற்றும் நிவாரண செயற்பாடுகள் போன்றவற்றை சிறந்த ஒருங்கிணைப்புடன் மேற்கொள்வதற்கும் அரசாங்க நிறுவனங்கள், தனியார் அமைப்புகள், அரசசார்பற்ற அமைப்புகள் உட்பட ஊடக நிறுவனங்களினால் ஒன்று சேர்க்கப்படும் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் பணிகளை இரட்டிப்பாகாமல் வினைத்திறனுடன் மேற்கொள்வதற்குமாக வழிமுறையொன்றை நடைமுறைப்படுத்தும் தேவை இனங்காணப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, எந்தவொரு தேசிய அவசர அனர்த்த நிலைமைக்கும் வெற்றிகரமாக முகங்கொடுப்பதற்கும் உயிர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கும் இயலுமாகும் வகையில் அரசாங்க நிறுவனங்கள், தனியார்துறை மற்றும் ஊடக நிறுவனங்கள் என்பவற்றுக்கிடையில் ஒருங்கிணைப்புடன் "தேசிய அவசரகால செயற்பாட்டுத் திட்டம் " நடைமுறைப்படுத்தும் பொருட்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.