• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
களனிவௌி புகையிரத பாதையையும் பிிரதான புகையிரத பாதையையும் விருத்தி செய்தல்
- 2035 ஆம் ஆண்டளவில் புகையிரத போக்குவரத்திற்கான கேள்வியை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, தற்போதுள்ள புகையிரதப் பாதை வலையமைப்பை விருத்தி செய்வதற்காக நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள "கொழும்புக்கு அண்மித்த புகையிரத பாதை கருத்திட்டத்தின்" முன் சாத்தியத்தகவாய்வு நடவடிக்கைகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் பிரதான புகையிரத பாதையினதும் களனிவௌி, கரையோர மற்றும் புத்தளம் ஆகிய புகையிரத பாதைகளினதும் அபிவிருத்திப் பணிகள் பல நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த அபிவிருத்தி பணிகளுக்கு புகையிரத ஒதுக்கு காணிகளை பயன்படுத்தும் போது அதனால் பாதிக்கப்படும் தரப்புகள் சம்பந்தமாக அங்கீகரிக்கப்பட்ட சமூக பாதுகாப்பு கொள்கைகளுக்கு அமைவாக நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக சமூக பொருளாதார ஆய்வுகளை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, களனிவௌி பாதையில் மருதானையிலிருந்து ஹோமகம வரையிலான பகுதியின் சமூக பொருளாதார ஆய்வுகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்தும் நோக்கில் களனிவௌிப் பாதையின் ஹோமகமவிலிருந்து அவிஸ்சாவெல்லை வரையிலான பகுதி மற்றும் பிரதான பாதையின் மருதானையிலிருந்து றம்புக்கனை வரையிலான பகுதி என்பவற்றின் சமூக பொருளாதார ஆய்வினை ஐக்கிய நாடுகளின் மனித குடியேற்ற நிகழ்ச்சித்திட்டத்தின் ( ) உதவியுடன் மேற்கொள்ளும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.