• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்ளூராட்சி அதிகாரசபைகள் எல்லை நிர்ணய மேன்முறையீட்டு மீளாய்வு குழு அறிக்கையிலுள்ள குறைபாடுகளை திருத்துதல்
- தேசிய எல்லை நிர்ணய குழுவின் சிபாரிசுகளுக்கு இணங்க பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களில், சில கிராம சேவையாளர் பிரிவுகளின் பெயர்கள் மற்றும் இலக்கங்கள், மற்றும் உள்ளூராட்சி அதிகாரசபைகளின் வட்டார உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆகியவற்றில் அச்சிடல் பிழைகள், எல்லை தொடர்பான பிரச்சினைகள், சில உள்ளூராட்சி அதிகாரசபைகள் தொடர்பான அச்சிடல் மற்றும் எழுத்துப் பிழைகள் ஆகியவற்றை குறைபாடுகளாக தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

ஆதலால், எல்லைப் பிரச்சினைகள் தொடர்பான குறைபாடுகளைத் திருத்துவதும் உள்ளூராட்சி அதிகாரசபைகளின் தேர்தல்களை துரிதமாக நடாத்தும் பொருட்டு திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தலொன்றை பிரசுரிப்பதும் அத்தியா வசியமானதாகும். அதற்கிணங்க, இவ்விடயம் பற்றி ஆராய்ந்து சிபாரிசுகளை இரு (02) வாரங்களுக்குள் சமர்ப்பிப்பதற்கென உள்ளூராட்சி அதிகாரசபை தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு ஏற்ப உத்தியோகத்தர்கள் குழுவொன்றை நியமிக்கும். பொருட்டு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.